அமெரிக்க சரக்கு ரயில் கம்பனிகளிடையே ஒரு கதை பலமாக உலா வந்தது | Tamil Metro Net


அதாவது நாம் அனைவரது தலைக்கு மேலும் கிலோமீட்டர் கணக்கான உயரத்துக்கு காற்று இருக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு இஞ்சுக்கும் 7 கிலோ காற்று அழுத்தம் உள்ளது. உங்கள் உடலின் ஒவ்வொரு இஞ்சு மேலும் ஏழு கிலோ எடையை வைத்தால் என்ன ஆகும்? அப்படியே நசுங்கிவிடுவோம்

ஆனால் அப்படி ஆகாமல் இருக்க காரணம் நம் காதுகள், நுரையீரல், மூக்கு, வயிற்றில் இருக்கும் காற்றின் அழுத்தமும், வெளியே இருக்கும் காற்றின் அழுத்தமும் ஒன்றே. அதனால் ஒன்றை ஒன்று கான்சல் செய்துவிடுகின்றன. நமக்கு எந்த வித்தியாசமும் தெரியாது.
இந்த ரயில்ரோடு கதைப்படி ஒரு எஞ்சினியர் ஒரு ரயில்வே டேன்கரை சுத்தம் செய்ய முடிவு செய்தார். அதனுள் இருக்கும் காற்றை வேக்வம் (vaccum) செய்து எடுத்துவிட்டு நீராவியை உள்ளே முழுக்க விட்டு நிரப்பி சுத்தம் செய்யலாம் என நினைத்தார். டான்கரை மூடி சீலிட்டு, அதனுள் இருக்கும் காற்றை வேக்வம் பம்ப் மூலம் அகற்றினார்.
அவ்வளவுதான்...வெளியே இருக்கும் காற்று அழுத்தம் உள்ளே இருக்கும் காற்று அழுத்ததை விட அதிகமாக, அத்தனை பெரிய ரயில் டான்கர் அப்படியே காலி கொகோகோலா கேனை கையால் நசுக்கினால் எப்படி நசுங்குமோ அப்படி நசுங்கியது.
கதை உண்மையோ, பொய்யோ? ஆனால் ரயுல்வே வட்டாரங்களில் கதை பலமாக நம்பபட்டது. மிதபஸ்டர்ஸ் (Mythbusters) எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதை பரிசோதனை செய்ய முடிவு செய்தார்கள். ஒரு ரயில்வே டாங்கரை கடன் வாங்கினார்கள். அதனுள் இருந்த காற்றை வேக்வம் செய்து எடுத்தார்கள். கதையில் சொன்ன மாதிரி அப்படியே டாங்கர் ஒரே வினாடியில் நசுங்கியது (காண்க விடியோ)
ஆக இந்த உள் அழுத்தம், வெளி அழுத்தம் கோட்பாடு கடலுக்கு அடியில் டைட்டானிக் நீர்மூழ்கி ஏன் வெடித்து சிதறியது என்பதையும் உலகின் மிக ஆழமான சேலஞ்சர் டீப் பகுதியிலும் எப்படி மீன்கள் வாழ்கின்றன என்பதையும் விளக்குகிறது
செலஞ்சர் டீப் (challenger deep, mariana trench) உலகின் மிக ஆழமான கடல்பகுதி, அதனுள் எவெரெஸ்டை போட்டால் மூழ்கிவிடும் அளவு ஆழம் என்றால் பார்த்துக்கலாம். அந்த ஆழமான பகுதியில் பூமியின் மேற்பரப்பில் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான நீர் அழுத்தம் நம் உடலில் இருக்கும். ஆனால் அந்த ஆழத்தில் வாழும் மீன்கள் உடலில் காற்றுப்பைகள் இல்லை. அவை ஆக்ஸிஜனை கடல் நீர் மூலமே தம் மூலம் பெறுகின்றன. அதனால் அவற்றின் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் இருக்கு நீர் அழுத்தம் ஒன்றுதான். அவற்றுக்கு சேலஞ்சர் டீப் பகுதியில் வசிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
டைடானிக் நீர்மூழ்கியின் உள்ளே காற்று இருந்தது. வெளியே நீர். ஆக உள்புற அழுத்தமும், வெளிப்புறம் அழுத்தமும் வேறு. அதன் ஒவ்வொரு அங்குலத்தின் மேலும் ஒரு யானை நிற்பது போன்ற அழுத்தம் இருந்தது. அதில் ஒரே ஒரு சின்ன ஓட்டை ஏற்பட அப்படியே அந்த நீர்மூழ்கி கால்பந்து சைஸுக்கு சுருங்கி நசுங்கிவிட்டது
சேலஞ்சர் டீப்புக்கு மனிதன் சென்று உள்ளே இறங்கினாலும் இதேகதிதான். அவன் உடலில் காற்றுப்பைகள் உள்ளன. அப்படியே நசுங்கிவிடுவான் என்கிறார்கள். அங்கே நம்ம டைட்டானிக் பட இயக்குனர் ஜேம்ஸ் காமரூன் சென்று இருக்கிறார். ஆனால் நீர்மூழ்கியை விட்டு இறங்காமல் ஆராய்ச்சி செய்துவிட்டு வந்துவிட்டார்
~ நியாண்டர் செல்வன்
புதியது பழையவை