டாக்டர் .வேல்முருகன் என்கிற சார்லி | Tamil Metro Net


 

நகைச்சுவை வேடமாக இருந்தாலும் குணச்சித்திர வேடமாக இருந்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துபவர் .

கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் ,இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என வருந்தியதுண்டு . ஆங்கிலத்தில் Unsung Hero என்ற வார்த்தைக்கு மிக கன கச்சிதமான உதாரணம் இவரே

காண்ட்ராக்டர் நேசமணியை கொண்டாடிய நாம் , என்னவோ நம் கோவாலுவை அந்த அளவிற்கு கொண்டாட மறந்துவிட்டோம் .

தலையில் அடிபட்டு அனைத்தையும் மறந்த நம் கோவாலுவின் வெள்ளேந்தியான முகபாவனைகள் மற்றும் வாய்ஸ் மாடுலேஷன் நடிப்பின் உச்சம் .இவரை தவிர எனக்கு தெரிந்து யாரும் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு சரியான அளவுகோலோடு நடித்திருக்க வாய்ப்பில்லை .

அதே போல் ,வெற்றிகொடிக்கட்டு திரைப்படத்தில் ,கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை இழந்து, ஊர் ஊராக சுற்றித்திரியும் கதாபாத்திரம் . குறிப்பாக பார்த்திபனை சந்திக்க வரும் ஒரு காட்சியில் ,ஒரு பைத்தியக்காரன் போல் அவர் நடிக்கும் நடிப்பு ,நடிப்பு என்பதையும் தாண்டி ,அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் .

சமீபத்தில் ,"Humour in Tamil Cinema” என்ற தலைப்பில் ,நம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் PhD படிப்பை முடித்தார் .

பழம்பெரும் குணச்சித்திர /நகைச்சுவை நடிகர் நாகேஷ் போன்று உயர் அங்கீகாரத்தில் இருக்க வேண்டியவர் ,நம் திரைத்துறை இவரை பயன்படுத்த,கொண்டாட மறந்துவிட்டது .

புதியது பழையவை