உக்ரைனில் போர் & ஜனாதிபதி தேர்தல் | Tamil Metro Net

 


என்னதான் உக்ரைனில் போர் நடந்தாலும்  2023-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று ஜனாதிபதி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 30.2% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷென்கோ 13.1% வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். யாரும் 50% வாக்குகளை பெறாததால், மே 1-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த இரு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர்.

டிமோஷென்கோ, ஜெலன்ஸ்கியின் போர் திறனை விமர்சித்து, அமைதிக்கான தனது திட்டத்தை முன்னிலைப்படுத்தினார். ஆனால் ஜெலன்ஸ்கி 73.2% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அடுத்ததாக அவரது கண் அவரது முக்கிய எதிரி மேல் திரும்பியது. அது விளாமிடிர் புடினா என கேட்டுவிடாதீர்கள். அவர் பெயர் வேலேரி ஷாலுஷ்னி (Valerii Zaluzhnyi). அவர்தான் உக்ரேனிய இராணுவத்தின் தலைமை தளபதி 

ஜெனெல்ஸ்கி என்னதான் மெஷின் கன்னுடன் போஸ் கொடுத்தாலும், உக்ரைன் போருக்கு தலைமை தாங்கியது லூலுஷ்னிதான். 2022 ரஷ்ய படையெடுப்பின் போது உக்ரேனின் வெற்றிகரமான தற்காப்புக்கு அவர் பெரிதும் புகழ் பெற்றார். முக்கியமாக 60 கிமி நீளத்துக்கு ரஷ்யபடைகள் கீவுக்கு வெளியே அணிவகுத்து நிற்க, ரஷ்ய படைகள் கீவ் நகரத்தை கைப்பற்றும் முயற்சியை ஷாலுஷ்னி திறம்பட முறியடித்தார்.

ரஷ்ய படைகள் நகருக்குள் நுழைவதை தடுக்க, லூலுஷ்னி பாலங்கள் மற்றும் சாலைகளை அழிக்கும் உத்தரவை பிறப்பித்தார். நகருக்குள் லூலுஷ்னி ரஷ்ய படைகளுக்கு எதிராக கெரில்லா போர் முறையை பயன்படுத்த உத்தரவிட்டார். இது ரஷ்ய படைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைனின் பெரிய ஹீரோ ஆகிவிட்டார்

இந்த தேர்தலில் லுலூஷ்னி போட்டியிட்டு இருந்தால் ஜெலென்ஸ்கியை தோற்கடித்து இருப்பார். ஆனால் போர் நடப்பதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அடுத்த தேர்தலில் நிச்சயம் நிற்பார் என கூறப்பட்டது

இந்த சூழலில் லூலுஷ்னி ஜெலென்ஸ்கியை டென்ஷன் ஆக்கும் காரியம் ஒன்றை செய்தார். "ரஷ்யாவிடம் உள்ள டோனபாஸ் கிழக்கு பகுதியை பிடிக்க முடியாது. ரஷ்யா அங்கே சுரங்கங்கள், கண்ணிவெடிகள், தடுப்பரன்களை ஏற்படுத்தி வலுவான டிபென்ஸுடன் நிற்கிறது. இனி இந்த போரில் எதிர்த்தாக்குதல் சாத்தியமில்லை, டிபென்ஸ் தான் ஆடமுடியும்" என ஒரு கட்டுரை எழுதினார்

இது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. நேட்டோ படைகள், புடின் அனைவருக்கும் இது தெரியும்.

"600 கோடி டால்ரை கொடுங்கள். பிடிபட பகுதிகள் அனைத்தையும் ஆறு மாதத்தில் மீட்பேன்" என வெளிநாடுகளில் சொல்லி நிதி கேட்டுக்கொண்டிருந்த ஜெலென்ஸ்கி ஆவேசமானார். லுலூஷ்னியை பதவிநீக்கம் செய்தார்

ஒரு போரில் வெற்றி, மேல் வெற்றி பெறும் ஜெனெரலை பதவிநீக்கம் செய்தது இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது

உக்ரெய்னில் இப்போது லுலூஷ்னி மேல் அனுதாப அலை வீசி வருகிறது. அடுத்த தேர்தலில் நிற்க ஒரு அனுதாப அலையை உருவாக்கி கொடுத்து விட்டார் ஜெலென்ஸ்கி. ஆனால் அதற்குள் சுருட்ட முடிந்ததை சுருட்டிக்கொண்டு ஜெலென்ஸ்கி ஐரோப்பாவுக்கு ஓடிபோய்விடுவார். 

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

 நியாண்டர் செல்வன்

புதியது பழையவை