கனடா வர பல தமிழர்கள் இப்போது தயங்குவது கனடா வந்தா வேலை இல்லை விலை வாசி கூட என்பதே | Tamil Metro Net


 

இந்த நிலமை உண்மை தான். ஆனால் நீங்க இருக்கும் இடங்களை பொறுத்து அது அமையும். 

கனடா ஈசி வாழ்வு இல்லை. ஈசியாக இருக்கவும் முடியாது. இங்கே தமன்னா வந்தால் கூட எங்கள் பலரால் நேராக சென்று பார்க்க முடியாது. நேரம் இல்லை. இந்த நிலையில் கனடா உள்ளதால் தான் நாம் இங்கு வர முயல்கிறோம். வருகின்றோம். கனடா பணக்கார நாடும் செம நல்ல அரச சிஸ்ரமும்.

கனடா வாழ்வு இதே 18 வயதை அடைய அனைவரும் வேலை செய்வார்கள். அப்பன் பல கோடிக்கு அதிபதி என்றாலும் பிள்ளை வேலை செய்தே ஆகும். அதோடு உலக தரத்தோட பார்த்தால் கனடா போல் சிஸ்ரம் பல வளச்சி அடைந்த நாகளிலே இல்லை. 

இலங்கை வாழ்வு வேறு வாடகை இல்லை. வீட்டு கடன் வட்டி இல்லை. கார் இல்லை பலரிடம் அதனால் insurance கட்ட தேவை இல்லை. 

ஏதோ கிடக்கிறதை உண்டு வாழ்வார்கள். பலருக்கு பொருளாதார பிரச்சனை. சிலருக்கு மட்டுமே இல்லை.

பலர் எல்லா வேலைக்கும் செல்ல மாட்டார்கள். சாதியம் விடாது.

பெண்கள் நினைத்ததை செய்ய முடியாது.  சமுதாயமும் ஆண்களும் விடார்கள்.

அனைவரும் படித்து முடித்து விட முடியாது. ஒரு சிலரே படிப்பை முடித்து வேலை செய்வார்கள்  மிகுதி படித்தும் ஒன்றே படிக்காமலும் ஒன்றே என்ற வாழ்வு. பிள்ளைகள் அனைவருக்கும்  பிள்ளைக்காசு வராது. வயதான அனைவருக்கும் பென்சன் இல்லை, வேலை இல்லை என்றால் வெல்பெயார் வீடு தேடி வராது. சீசனல் வேலை என்றால் மிகுதி காலத்துக்கு சம்மளம் வராது. பெரிய மெடிக்கல் பிரச்சனை வந்தா யாரிடமாவது கை ஏந்த வேண்டும். கடன் வங்கிகள் தராது. கோடி கோடியாக நாடே கடனில். மனித சுதந்திரம் முற்றாக இல்லை. பெண்களுக்கு கொடுமையோ கொடுமை. யாரையும் விரும்பி போனா ஓடுகாலி. விரும்பாம இருந்தா ஆண்களை விலை கொடுத்து வேண்ட வேண்டும். அதில் தரத்துக்கு ஏற்ற டிமான்ட் வேற. சீதனம் இல்லாத பெண் பிள்ளைகள் வாழ்வு அவ்வளவு தான். இலங்கையில் ஒருவர் நடந்து போற றோட்டை திருத்தம் செய்வதாக இருந்தால் கூட உலக வங்கி கடன் தரணும். இப்படி பலதை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் கனடாவில் இது அனைத்துக்கும் வேறுபாடே. ஆனால் கனடாவில் ஒரு றிக்கி உள்ளது.  ஈசியாக வாழவும் அது என்னவென்றால் பெரும் நகரங்களில் இருக்கவே கூடாது. அதற்கு அண்டிய நகரங்களில் இருந்தால் வாடகை செம குறைவு. வாகன insurance செம குறைவு. இது இரண்டும் தான் இங்கே அதிகம் பணத்தை இழக்க வைக்கும் ஒன்று. இவை இரண்டையும் சரி செய்ய இதுவே வழி.

இதையும் தாண்டி வேறு மானிலங்கள் போனால் அங்கே கூடுதலாக சீசனல் வேலை தான். 6 மாதம் வேலை 6 மாதம் சம்பளத்தோடு வீட்டில். வெள்ளையர்கள் அதிகம் இப்படியான இடங்களில் வாழ்வதால் சகல உதவிக்கும் பஞ்சமே இல்லை. அவர்களின் இயற்கையான குண அம்சம் இது.  நமக்கான வழியை காட்டியே ஆவார்கள். 

செம யாலியாக போகும். ஆனால் நம்மவர்கள் இதை தெரியாது கனடா கஸ்ரம் வாடகை கூட,  வேலை கூட, வேலை இல்லை எங்கள் இனத்தின் நல்ல குணம் ஒன்று உள்ளது தானே. கும்முப்பட்டாலும் எம்மவரோடு இருந்தால் தான் அவர்களுக்கு ஒரு திருப்தி. 

ஆட்டு மந்த கூட்டங்கள் மாதிரி மே மே என்று சுத்தி சுத்தி சுளர வேண்டியது. ஒரே இடத்தில் கனடாவில் உள்ள வேறு இடங்கள் கூட கனடாவில் வாழும் பல நம்மவருக்கு தெரியாது.

எனது வாழ்வியலும் இதுவே. எவராவது வேலை வேலை கஸ்ரம் கஸ்ரம் என்றால் சிரிப்பு வரும்.  5000 dollars உழைத்து 4000 செலவு செய்து வாழ்வதை விட பிற இடங்களில் 4000 உழைத்து 2500 மிகுதிப்படுத்துவதே கெட்டி.

அதோடு வெள்ளைகளோடு நெருக்கமாக இருந்தால் வழி காட்டலும் வஞ்சகம் இல்லாமல் இருக்கும்.

Post by - கனகசபை குழந்தையர் (FB)


புதியது பழையவை