கலபகோஸ் தீவுகள் ஆமைகள் | Tamil Metro Net

 


கேலபகோஸ் தீவுகள், தென்னமரிக்க நாட்டின் எக்குவடரின் மேற்குக் கடற்கரையிலிருந்து சுமார் 1600 கிமி தொலைவில் அமைந்துள்ளன. பெரும் நிலபப்ரப்பில் இருந்து இப்படி துண்டிக்கபட்டு இருப்பதால் தீவுகளில் காணப்படும் பல உயிரினங்கள், வேறு எங்கும் காணப்படாத தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.
கேலபகோஸ் தீவுகளின் மிகவும் பிரபலமான உயிரினங்கள், அதன் நில ஆமைகள் ஆகும். கேலபகோஸ் தீவுகளில், 13 வெவ்வேறு வகையான நில ஆமைகள் காணப்படுகின்றன. இந்த நில ஆமைகள், மிகவும் நீண்ட ஆயுளைக் கொண்டவை. 100 வயது வரை வாழக்கூடியவை.
சார்லஸ் டார்வின் தனது பரிணாமக் கோட்பாட்டை உருவாக்குவதற்கு கேலபகோஸ் தீவுகளில் செய்த பயணம் உதவியது. டார்வின் 1831 ஆம் ஆண்டு முதல் 1836 ஆம் ஆண்டு வரை, ஐந்து ஆண்டுகளுக்கு கேலபகோஸ் தீவுகளில் பயணம் செய்தார். இந்த பயணத்தில், அவர் தீவுகளில் வாழும் பல்வேறு வகையான உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்தார்.
டார்வின் தனது ஆய்வின் மூலம், கேலபகோஸ் தீவுகளில் வாழும் பல்வேறு உயிரினங்கள், அவை வாழும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். எடுத்துக்காட்டாக, தீவுகளில் காணப்படும் தவளைகள், அவற்றின் தோலின் நிறத்தை, அவை வாழும் தீவின் மண்ணின் நிறத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவை. இது, தவளைகள் தங்கள் எதிரிகள் பார்வைக்கு தெரியாமல் தப்பிக்க உதவுகிறது. ஒவ்வொரு தீவின் தவளையின் தோலுக்கும் ஒவ்வொரு நிறம். இதன்மூலம் தான் நிலத்துக்கு ஏற்ப உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து தப்பிபிழைக்கின்றன எனும் கருத்தாக்கம் டார்வின் மனதில் பிறந்தது
இத்தனை முக்கியமான தீவு 1959 ஆம் ஆண்டு முதல் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன பயன்? அதே ஆண்டில் சில மீனவர்கள் அங்கே வந்து இறங்கி சில ஆடுகளை விட்டுவிட்டு போனார்கள். அங்கே அவற்றை வேட்டையாட எந்த உயிரினமும் இருக்கவில்லை. சுமார் 60 கிமி பரப்பளவு உள்ள தீவில் இருந்த மலைகள், மரங்கள், புற்கள், செடிகள் என அனைத்தையும் ஆடுகள் மேய்ந்தன. 1990க்களில் ஆடுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
உண்ண உணவின்றி தீவின் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து, நம் டியகோ வந்து காப்பாற்றும் சூழல் உருவானது. அதை முந்தைய பதிவில் பார்த்தோம். ஆனால் 1 லட்சம் ஆடுகளை கொன்றால் தான் தீவின் சுற்றுசூழல் தப்பிபிழைக்கும். இல்லையெனில் அங்கே ஒரு இலை கூட மிஞ்சாது.
எக்வடார் அரசு ராணுவத்தை களத்தில் இறக்கியது. ஹெலிகாப்டர், இயந்திர துப்பாக்கிகளுடன் ராணுவம் வந்து இறங்கியது. சுமார் 95% ஆடுகள் கொல்லப்ட்டன. ஆனால் மீதமுள்ள 5 % ஆடுகள் மலைகளில் ஏறி பதுங்கிக்கொண்டன. இரண்டு ஆடுகள் ஒரு லட்சம் ஆடுகள் ஆகின. ஐயாயிரம் ஆடுகளை அப்படியே விட்டுவிட்டு போகமுடியுமா என்ன?
அதன்பின் "ஜூடாஸ் ஆடு" எனும் புராஜக்டை உருவாக்கினர்கள். சில ஆடுகளை பிடித்து கருத்தடை செய்து அவற்றில் ஜிபிஎஸ்ஸை கட்டி அனுப்பிவிடுவார்கள். அவை மற்ற ஆடுகள் இருக்குமிடத்தை கண்டுபிடித்து அவற்றுடன் சேர்ந்துகொள்ளும். அதன்பின் அந்த ஆடுகள் வேட்டையாடப்படும். இப்படி திவில் ஜூடாஸ் ஆடுகளை தவிர அனைத்து ஆடுகளும் கொல்லபட்டன. கருத்தடை செய்யபட்டதால் அவற்றை மட்டும் விட்டுவிட்டார்கள்.
தீவில் இருந்த 1 லட்சம் ஆடுகளை உண்ணவும் இல்லை, ஏற்றுமதி செய்யவும் இல்லை. தீவின் இயற்கை வளங்களை உண்டு வளர்ந்த அவற்றை வெளியுலகுக்கு ஏற்றுமதி செய்வது தீவின் வளத்தை ஏற்றுமதி செய்வதுபோல் தான். பத்து ஆடுகளில் ஒரு மரத்துக்கு சமமான ஊட்டசத்துக்கள் உள்ளதால் இவை பத்தாயிரம் மரங்களுக்கு சமம். அவை இங்கேயே மக்கி, உரமாகட்டும் என கணக்குபோட்டார்கள்.அதேபோல் தீவில் இப்போது இயற்கை வளம் பெருகி ஆமைகள் தொகையும் பெருகிவிட்டது.
நகத்தாலே கிள்ளுவதை துவக்கத்தில் கிள்ளாமல் விட்டால் கடைசியில் இப்படி கோடரியால் தான் வெட்டி எடுக்கவேண்டும் என பழமொழி உண்டு..

~ நியாண்டர் செல்வன் (Thanks)
புதியது பழையவை