கனடா விசிற்றர் விசா நிறுத்தி விட்டதாக வதந்திகள் பரவுகின்றது. அதில் உண்மை இல்லை. ஆனால் மட்டு படுத்தல் உள்ளது உண்மை. | Tamil Metro Net

 


அப்பிளை பண்ணுபவர்கள் வீதமும் குறைவு என்பதால் விசா பெறுபவர்கள் கனடா வருபவர்கள் வீதமும் குறைவு. அவ்வளவு தான். 

நவம்பர் மாதம் றிவியு பண்ண போகினமே தவிர அதன் முடிவு நிறுத்த போவது என்பது இல்லை. 

முகவர்மாரை தடுத்தே இதை அவர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் பல இன்னல்களை கடந்தே அவர்களும் விசா தர வேண்டி உள்ளது.

எதுவும் அற்ற ஒரு பாமர இனத்தை உடனடியாக உச்ச நிலைக்கு கொண்டு செல்வது என்பது சாதாரண விஷயமல்ல என்பாதால் அனைத்து தடைகளையும் தாண்டியே கனடா வாழ்வு உங்களுக்கு அமையும்.

 விசமிகள் அனைவரையும் கடந்தே நீங்க இந்த இலக்கை அடைய முடியும் என்பதால் உங்களை நீங்கள் குழப்பாது திரும்ப திரும்ப முயற்சி செய்யுங்கள். அதனால் முயற்சியை எவரும் கை விடவே வேண்டாம். 

இப்போது வெறும் 20 பெயர் மட்டில் தான்   ஒவ்வொரு நாளும் கனடாவின் கொழும்பு விஎப்எஸ் வாறதே. அதில் கை அடையாளம் வைக்க 10. விசா பெற பாஸ்போட் கொடுக்க 5. பாஸ்போட் விசாவோடு பெற 5. அதனால் ஒரு கிழமையில் அண்ணளவாக 25 பேர் தான் விசா பெறுகின்றனர். 

உண்மையில் விசமிகள் வென்று விட்டார்கள் என்பது தான் உண்மை. ஆனால் முற்று முழுதாக வெல்ல விடாது நீங்க தான் உங்களை காக்க வேண்டும்.

புதியது பழையவை