டென்மார்க் Visa அரசின் புதிய சலுகை..!

 

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு செல்ல காத்துக்கிடக்கும் ஐடி ஊழியர்களுக்கு லட்டு மாதிரி வந்த செம சான்ஸ். ஐரோப்பிய நாடுகளில் பணியாற்ற விரும்பும் அனைத்து ஊழியர்களுக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. டென்மார்க் அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இந்திய ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அந்நாட்டில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கும், அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறைகளை அமலாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் டென்மார்க்-ல் இருக்கும் நிறுவனங்களில் வெளிநாட்டவர்கள் ஒரு குறுகிய காலத்திற்கு எவ்விதமான வொர்க் பர்மிட், வீடு ஆகியவைற்றை இல்லைமல் பணியாற்ற அனுமதிக்கிறது.

டென்மார்க் அரசின் புதிய விதிமுறைகள் படி, அந்நாட்டில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் 50 ஊழியர்களை கொண்டு இருந்தால் வெளிநாட்டு ஊழியரை இந்த விதிமுறையின் கீழ் அழைத்து பணியாற்ற அனுமதிக்கிறது.


புதிய விதிகளின்படி, ஒரு தனிநபர்கள் டென்மார்க் நிறுவனத்தில் 180 நாட்களுக்குள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வேலை காலமும் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் முதல் முறைக்கும் 2வது முறைக்கும் குறைந்தது 14 நாட்கள் டென்மார்க்-ல் இருந்து கட்டாயமாக வெளியேறி இருக்க வேண்டும்.

மேலும் இந்த சலுகை நிர்வாக பணியில் இருப்பவர்களுக்கும், உயர் மற்றும் நடுத்தரே பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்தகைய சலுகையை அளிக்க முக்கியமான காரணம் டென்மார்க் நிறுவனத்தில் சரியான தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல் சிக்கிக்கொண்டு இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இப்புதிய விதிமுறையில் வொர்க் பர்மிட் இல்லாமல் டென்மார்க் நாட்டில் பணியாற்ற முடியும் என்பது தான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு 40 நாளும், பிஸ்னஸ் டிரிப்-ல் வரும் வெளிநாட்டு ப்ரொபஷனல் அதிகாரிகளுக்கு 90 நாள் வரையில் இருக்க அனுமதிக்கப்படுகிறது.

புதியது பழையவை